வேடசந்தூர் பகுதியில், அனைத்து கிராமங்களிலும் காவிரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை - தேர்தல் பிரசாரத்தில் பரமசிவம் எம்.எல்.ஏ. பேச்சு


வேடசந்தூர் பகுதியில், அனைத்து கிராமங்களிலும் காவிரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை - தேர்தல் பிரசாரத்தில் பரமசிவம் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 25 March 2019 4:00 AM IST (Updated: 25 March 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதியில் அனைத்து கிராமங்களிலும் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் கூறினார்.

வேடசந்தூர்,

அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நாகம்பட்டி, தட்டாரபட்டி, குட்டம், பூதிப்புரம், வே.புதுக்கோட்டை, நல்லமனார்கோட்டை, மல்வார்பட்டி, மாரம்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தம்பி துரைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர்பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வேடசந்தூர் பகுதியில் மழை பெய்யாத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story