களியக்காவிளை அருகே மனைவியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு


களியக்காவிளை அருகே மனைவியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 March 2019 10:45 PM GMT (Updated: 24 March 2019 9:15 PM GMT)

களியக்காவிளை அருகே மனைவியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல், வட்டப்பழஞ்சி விளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர், அருமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செலின் (வயது 50), திருத்துவபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது செலினை, கிறிஸ்டோபர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் செலின் கண்ணில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.

வழக்குப்பதிவு

இதுபற்றி செலின் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்ணில் காயம் அடைந்த செலின், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Next Story