கயத்தாறில், குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கிய தண்ணீர்


கயத்தாறில், குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கிய தண்ணீர்
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 25 March 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல் சாலையில் தேங்கியது.

கயத்தாறு, 

கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கயத்தாறு வழியாக 160-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக குழாய்கள் கயத்தாறு பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி அந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கயத்தாறு போலீஸ் நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி போலீஸ் நிலையம் முதல் கயத்தாறு புதிய பஸ் நிலையம் வரை சாலையில் குளம் போல் தேங்கி கிடந்தது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பஜாரில் கடை வைத்து இருப்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

வாரம் இது போல் 2 முறை குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் பழுதடைந்த குழாய்களை உடனடியாக மாற்றி விட்டு, தரமான குழாய்களை பதித்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story