ரெயில்வே நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்


ரெயில்வே நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்
x
தினத்தந்தி 25 March 2019 10:49 AM IST (Updated: 25 March 2019 10:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மெட்ரோ, குஜராத் மெட்ரோ, ரெயில்வே சுற்றுலா கழகம் உள்ளிட்ட ரெயில்வே நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரெயில்வே ஆட்தேர்வு வாரியம், அமைச்சு மற்றும் தனித்தனி நிலை பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. ஸ்டெனோகிராபர், இளநிலை மொழி பெயர்ப்பாளர், தலைமை சட்ட உதவியாளர் உள்ளிட்ட 30 பிரிவில் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. மொத்தம் 1665 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிவாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. சில பணியிடங்களுக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அனுமதிக்கப்படுகிறது.

பிளஸ்-2 படித்தவர்கள், அத்துடன் சுருக்கெழுத்து படித்தவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை இந்தி, ஆங்கிலம் படித்தவர்கள் இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம் பட்டப்படிப்பு, பிளஸ்-2 படிப்புக்குப் பின், அறிவியல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள், முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பி.ஏ. இசை, நடனம் படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற ஏப்ரல் 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி தேர்வு ஜூன், ஜூலையில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை http://www.rrcb.gov.in மற்றும் www.rrbchennai.gov.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

ஐ.ஆர்.சி.டி.சி.

இந்திய ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக அமைப்பு (ஐ.ஆர்.சி.டி.சி.), தெற்கு மண்டலத்தில் சூப்பிரவைஸர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை 2 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தகுதியானவர்கள் மேலும் ஓராண்டு பணியாற்ற அனு மதிக்கப்படுவார்கள். பி.எஸ்சி. (ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன்) படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-3-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும்.

நேரடி நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான நேர்காணல் ஏப்ரல் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. சென்னையில் 12-ந் தேதியும், பெங்களூருவில் 10-ந் தேதியும், திருவனந்தபுரத்தில் 9-ந் தேதியும் நேர்காணல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.irctc.com/careers_En.jsp என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

குஜராத் மெட்ரோ

குஜராத் மெட்ரோ ரெயில் நிறு வனத்தில் பொது மேலாளர் (சிவில்), மேலாளர், துணை பொதுமேலாளர், சூப்பிரவைசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயர் ஆர்கிடெக்ட் என்ஜினீயர் பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. முழுமையான விவரத்தை www.gujaratmetrorail.comஎன்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 5-4-2019-ந் தேதியாகும்.

பெங்–க–ளூரு மெட்ரோ

பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனம், கர்நாடகா மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து செயல்படுத்தும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர், செக்சன் என்ஜினீயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

செக்சன் என்ஜினீயர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்ட, பி.இ., பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுடையவர்களும், அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மற்றொரு அறிவிப்பின்படி பெங்களூரு மெட்ரோவில் ஜெனரல் மேனேஜர், சீப் என்ஜினீயர் போன்ற பணிகளுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கும் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இவை பற்றிய முழுமையான விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 8-4-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.


Next Story