திருச்சி ‘பெல்' நிறுவனத்தில் 400 பயிற்சிப்பணிகள்


திருச்சி ‘பெல் நிறுவனத்தில் 400 பயிற்சிப்பணிகள்
x
தினத்தந்தி 25 March 2019 11:07 AM IST (Updated: 25 March 2019 11:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது திருச்சி கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பிட்டர் பணிக்கு 150 இடங்களும், வெல்டர் பணிக்கு 110 இடங்களும், டர்னர் பணிக்கு 11 இடங்களும், மெஷினிஸ்ட் பணிக்கு 16 இடங்களும், எலக்ட்ரீசியன் பணிக்கு 35 இடங்களும், சிஸ்டம் அட்மின் பணிக்கு 20 இடங்களும் உள்ளன. இவை தவிர வயர்மேன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெட்டல் ஒர்க்கர், கார்பெண்டர், பிளம்பர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பாக முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொள்ளவும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 30-3-2019-ந் தேதியாகும். ஏப்ரல் 4-ந்தேதி சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். தகுதியானவர்கள் 11-4-2019 முதல் பயிற்சி பணியில் சேரலாம். இது பற்றிய விவரங்களை www.bheltry.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Next Story