மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு
மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு அடிப்படையில் 127 பேர் பணியமர்த்தப்படுகிறார்கள்.
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் சுருக்கமாக என்.டி.ஆர்.ஓ. (NTRO) என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
தற்போது 2019-ம் ஆண்டுக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ‘குரூப்-பி’ தரத்திலான (நான் ஹெசட்டடு) குடிமைப் பணியிடங்களாகும். எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 52 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 75 இடங்களும் உள்ளன. மொத்தம் 127 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப்பிரிவுக்கு 48 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 8 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 22 இடங்களும் உள்ளன.
30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) மூலம் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 4-ந் தேதியாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.introrectt.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
Related Tags :
Next Story