தொடர்மின்வெட்டை கண்டித்து மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


தொடர்மின்வெட்டை கண்டித்து மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2019 3:45 AM IST (Updated: 25 March 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் 33 கிலோவாட் மின் பகிர்மான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வேலகாபுரம், மாளந்தூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கட்சூர், சீதஞ்சேரி, ஆலப்பாக்கம், நந்திமங்கலம், தொம்பரம்பேடு, ஜங்காலபல்லி, தாராட்சி உள்பட 80 கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர் மின்வெட்டால் நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தொடர் மின்வெட்டை கண்டித்து 80 கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஊத்துக்கோட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து மின் வாரியம் செத்துவிட்டது என்று கோஷங்கள் எழுப்பியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீரான மின் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story