கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் வேட்பு மனு தாக்கல்


கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 25 March 2019 10:45 PM GMT (Updated: 25 March 2019 8:13 PM GMT)

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.செல்லகுமார் நேற்று, மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டாக்டர்.பிரபாகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., சுகவனம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 19-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாவது நாளான 20-ந் தேதியும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மூன்றாவது நாளான 21-ந் தேதி ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நான்காவது நாளான 22-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, நாம் தமிழர் கட்சி மதுசூதன் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் என 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 5-வது நாளான நேற்று காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமார், சுயேட்சை வேட்பாளர்களாக பெங்களூரூவை சேர்ந்த சீனிவாசன், ஓசூரை சேர்ந்த நாகேஷ், கெலமங்கலத்தை சேர்ந்த மீனா விந்தைவேந்தன் என மொத்தம் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுவரை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story