பர்கூர் அருகே வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் 4 மாடு, 3 ஆடுகளையும் கடித்தது
பர்கூர் அருகே வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த நாய் 4 மாடுகள், 3 ஆடுகளையும் கடித்தது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடியில் நேற்று முன்தினம் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 90) என்பவரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது.
இதே போல அங்கு தெருக்கூத்து பார்த்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காவேரியப்பன் (70), ராஜேஸ்வரி (48), நித்திஷ், (10), கணேசன் (72) ஆகியோரையும் அந்த தெருநாய் கடித்து குதறியது. படுகாயம் அடைந்த 5 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையே வெறிநாய் ஆனந்தன், பாப்பாத்தி, நரசிம்மன், ராமச்சந்திரன் ஆகியோர் வளர்த்து வந்த மாடுகளையும் கடித்தது. மேலும் முருகன் என்பவர் வளர்த்து வந்த 3 ஆடுகளையும் கடித்து குதறியது. சிறுவன் உள்பட 5 பேரையும், 4 மாடுகள், 3 ஆடுகளையும் வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story