தூத்துக்குடியில் பா.ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு


தூத்துக்குடியில் பா.ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு
x
தினத்தந்தி 26 March 2019 3:15 AM IST (Updated: 26 March 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பா.ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் நேற்று மாலையில் பா.ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜனதா வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story