வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிலைகள், வெள்ளி காசுகள் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.3½ லட்சம் சிலைகள், வெள்ளி காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழப்பழுவூர்,
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையம் அருகே துணை வட்டாட்சியர் கனகராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது காருக்குள் இருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பழங்கால உலோக சிலைகள், வேலைப்பாடுகளுடன் கூடிய மர சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மகன் மனோபரதன்(வயது 29) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன்(57) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் முறையான ஆவணங்கள் இல்லாததால் சிலைகள் மற்றும்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் சத்தியநாராயணனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவை அனைத்தும் அரியலூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 450 கிராம் எடையுள்ள வெள்ளி காசுகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, காரில் இருந்த சேலத்தை சேர்ந்த அசோக்குமாரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவரிடம் பணம் மற்றும் வெள்ளி காசுகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், வெள்ளி காசுகளை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story