ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல்


ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 4:15 AM IST (Updated: 26 March 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக உள்ள மகாராஜன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நேற்று ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணகியிடம் தாக்கல் செய்தார்.

அப்போது ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் அப்பாவு, தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சந்திரன், தி.மு.க. கடமலை- மயிலை ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி (தனி) தி.மு.க. வேட்பாளராக சரவணக்குமார் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று சரவணக்குமார் பெரியகுளம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரித்தாவிடம் தாக்கல் செய்தார். இதில் தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், நகர செயலாளர் முரளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், காங்கிரஸ் வட்டார தலைவர் ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பி.துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story