லாரி மோதி விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தலைநசுங்கி சாவு டிரைவருக்கு வலைவீச்சு


லாரி மோதி விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தலைநசுங்கி சாவு டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 March 2019 3:45 AM IST (Updated: 26 March 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தலைநசுங்கி பலியானார். போலீசார்லாரிடிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

தானே, 

தானே மேற்கில் உள்ள கோபட் பகுதியில் உள்ள சாலையில் நேற்றுமுன்தினம் இரவு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோபட் பஸ்நிலையம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்த வாலிபர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சென்ற ரபோடி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியான வாலிபரின் பெயர் குனால் காட்போலே(வயது27) என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story