பல்லடம் அருகே சிமெண்டு, ஜல்லி ஏற்றி வந்த லாரிகள் மோதல் டிரைவர்கள் காயமின்றி தப்பினர்
பல்லடம் அருகே சிமெண்டு, ஜல்லி ஏற்றி வந்த லாரிகள் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.
பல்லடம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). இவர் தனது சொந்த லாரியில் அரியலூரில் இருந்து சிமெண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு கோவை பெரியநாயக்கன் பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் கோடங்கிபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்திற்கு ஒரு லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி பல்லடம் செம்பிபாளையம் பிரிவில் வந்தபோது சிமெண்டு ஏற்றி வந்த லாரியும், ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரியும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.
இதனால் 2 லாரிகளின் முன் பகுதிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story