வேதாரண்யத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்


வேதாரண்யத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

வேதாரண்யம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை ஐகோர்ட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் இணைந்து பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு வேதாரண்யம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றியதாக பொதுமக்கள் கூறி பாராட்டு தெரிவித்தனர். மேலும், மீண்டும் அந்த இடத்தில் கொடிக்கம்பங்கள், கொடிமேடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதால் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story