திருச்செந்தூர் கோவிலில் ராசாத்தி அம்மாள் சாமி தரிசனம்


திருச்செந்தூர் கோவிலில் ராசாத்தி அம்மாள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 March 2019 3:30 AM IST (Updated: 27 March 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராசாத்தி அம்மாள் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராசாத்தி அம்மாள் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவர் தினமும் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

தாயார் சாமி தரிசனம்

இந்த நிலையில் கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழி எம்.பி.யின் தாயாருமான ராசாத்தி அம்மாள் நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர், கோவிலில் நடந்த சண்முகா அர்ச்சனையில் கலந்து கொண்டு வழிபட்டார். பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தமிழரசி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சதீஷ், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மந்திரமூர்த்தி, பொன் முருகேசன், முன்னாள் நகர செயலாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story