நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் மனோஜ் பாண்டியன் பேச்சு
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.
நெல்லை,
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.
தேர்தல் பிரசாரம்
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் சமாதானபுரம், மனகாவலன்பிள்ளைநகர், சாந்திநகர், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு நெல்லை தொகுதி மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நெல்லை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து அதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடி நல்லாட்சி செய்து வருகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக தான் அ.தி.மு.க.- பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். நான் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.க்கள்
பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலாசத்யானந்த், வசந்திமுருகேசன், அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, தலைவர் கணபதி சுந்தரம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், இளைஞர் அணி செயலாளர் அரிகரசிவசங்கர், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ஜெனி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமதுஅலி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் சுத்தமல்லி முருகேசன், பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழப்பாவூர்
முன்னதாக பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள மைதானம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story