கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம்


கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 27 March 2019 4:00 AM IST (Updated: 27 March 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

6-வது அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம் மற்றும் வல்லுனர்களுக்கு பாராட்டு விழா மைய வளாகத்தில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் மத்திய அரசின் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கழக நிதி உதவியுடன் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் மற்றும் ஊரக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளாக வழங்கி வருகிறது. இந்நிலையில் 6-வது அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம் மற்றும் வல்லுனர்களுக்கு பாராட்டு விழா மைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தலைமை தாங்கி பேசினார். வேளாண் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஹைதராபாத் முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ராஜ்கலா, சோபனா, அசோக்குமார், திருமலைவாசன் மற்றும் மையத்தின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கிரீடு வேளாண் மையத்தை தேசிய அளவில் சிறந்த மையமாக டெல்லி மகிந்திரா கம்பெனி அறிவித்துள்ளது. இதற்காக சோழமாதேவியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதுநிலை விஞ்ஞானி, மையத்தின் தலைவர் அழகுகண்ணன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மைய தலைவர் நடனசபாபதி வரவேற்றார். முடிவில் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் நன்றி கூறினார். 

Next Story