கர்நாடகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல்: 14 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது


கர்நாடகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல்: 14 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 27 March 2019 3:30 AM IST (Updated: 27 March 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி 14 தொகுதிகளில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி 14 தொகுதிகளில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

2-வது கட்ட தேர்தல்

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது. அதாவது சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா ஆகிய தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.

வேட்புமனு தாக்கல்

இந்த 14 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். 5-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 8-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

Next Story