மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 6-ம் வகுப்பு மாணவி சாவு தந்தையுடன் சென்றபோது பரிதாபம்


மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 6-ம் வகுப்பு மாணவி சாவு தந்தையுடன் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 10:24 PM GMT)

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தவறி விழுந்து 6-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தாள்.

மும்பை, 

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தவறி விழுந்து 6-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தாள்.

தவறி விழுந்த சிறுமி

மும்பை அந்தேரியில் உள்ள பார்சி காலனி பகுதியை சேர்ந்தவர் பார்கத் கபாடியா. இவருடைய ஒரே மகள் பர்வாரா(வயது11) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று கொலபாவில் நடந்த ஓவியப்போட்டியில் கலந்து கொண்டாள். மதியம் ஓவியப்போட்டி முடிந்தபின் அங்கிருந்து தந்தையுடன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள்.

அப்போது பிரபாதேவியில் உள்ள பெங்கால் கெமிக்கல்ஸ் அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் பர்வாரா எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தவறி விழுந்தாள்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில், தலையில் பலத்த காயம் அடைந்து பர்வாரா ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். இதை பார்த்து அவளின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் மகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பர்வாரா பரிதாபமாக உயிரிழந்தாள். தகவலறிந்து சென்ற தாதர் போலீசார் பர்வாராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story