மும்பையில் இருந்து புறப்பட்டு சென்ற சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டா? பாதுகாப்புக்கு போர் விமானங்கள் அணிவகுத்து உடன் சென்றன
மும்பையில் இருந்து புறப்பட்டு சென்ற சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பையில் இருந்து புறப்பட்டு சென்ற சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல்
மும்பை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் மொத்தம் 263 பயணிகள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமான நிறுவனத்துக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இது குறித்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பதற்றம்
இருப்பினும் அவர் எச்சரிக்கையுடன் விமானத்தை தொடர்ந்து செலுத்தி நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கினார். தரை இறங்கும் வரையில் அந்த விமானத்துக்கு சிங்கப்பூரின் 2 போர் விமானங்கள் பாதுகாப்பாக அணிவகுத்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைகளுக்கு பின்னர் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பயணிகளிடையே பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், அதே விமானத்தில் குழந்தையுடன் பயணம் செய்த ஒரு பெண்ணை மட்டும் போலீசார் விசாரணைக்காக பிடித்து வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story