அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் சென்று அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு


அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் சென்று அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 26 March 2019 11:37 PM GMT (Updated: 26 March 2019 11:37 PM GMT)

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் சென்று வாக்குசேகரித்தார். அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அவர் வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர் தனது வாக்குசேகரிப்பை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் துரிஞ்சாபும் ஒன்றியம் ஆனந்தல் கிராமத்தில் தொடங்கினார். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான ஏ.கே.அரங்கநாதன் தலைமை தாங்கினார். துரிஞ்சாபுரம் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் ஏ.கே.ஆர்.ஜெயபிரகாஷ் வரவேற்றார்.

முன்னதாக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரை மேள தாளத்துடன் 100-க்கு மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பூதமங்கலம், வேடந்தவாடி, எரும்பூண்டி, கொத்தந்தவாடி, கருமாரபட்டி, மங்கலம், நூக்காம்பாடி, ராந்தம், வள்ளிவாகை கிளிப்பட்டு உள்பட 10-க்கு மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ., பா.ம.க. மாநில துணை செயலாளர் காளிதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெங்கடேசன், பேரவை செயலாளர் அருள்பழனி, ஒன்றிய பேரவை செயலாளர் அரங்கநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோவிந்தராஜ், பா.ம.க.மாவட்ட செயலாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன், முருகன், சம்பத், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story