ஷார்ப் ஏர் பியூரிபையர்
இப்போது சுத்தமான, சுகாதாரமான காற்று என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது.
நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுத்தமான காற்று என்பது தேடிப்பிடிக்க வேண்டியதாக உள்ளது. இதனாலேயே வீடுகளில் சுத்தமான காற்றை அளிக்கும் பியூரிபயர்களுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்னணு பொருள்களைத் தயாரிக்கும் ஜப்பானின் ஷார்ப் நிறுவனம் கே.ஜி.ஜி40.எம் என்ற பெயரிலான பியூரிபயரை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆக்டிவ் பிளாஸ்மாகிளஸ்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் காற்றில் கலந்துள்ள நச்சு வாயுக்களை அகற்றி சுத்தமான காற்று நிலவச் செய்யும். இதன் விலை ரூ.33 ஆயிரமாகும்.
இதில் ஹெபா மற்றும் பான்டா பில்டர்கள் உள்ளன. இது காற்றில் கலந்துள்ள நச்சு ரசாயன கலவைகளை வடிகட்டிவிடும். குறிப்பாக டொலூயின், ஈதைல் பென்ஸைன் உள்ளிட்ட நச்சு வாயுக்களை வடிகட்டிவிடும். ரசாயன காற்று சுற்றுப் புறத்தில் இருந்தால் இதில் உள்ள பிளாஸ்மா கிளஸ்டர் தொழில்நுட்பமானது புதிதாக காற்றை உருவாக்கி அறையில் பரவச் செய்யும். இதில் ஈரப்பதத்தை காக்கும் தொழில் நுட்பம் உள்ளது. இது காற்றில் ஈரப்பதத்தின் நிலையை உணர்ந்து அதற்கேற்ற தொழில்நுட்பத்துடன் செயல்பட உதவும். ஒரு சுத்திகரிப்பான் 350 சதுரஅடி அறைக்குப் போதுமானது. இது பிரிட்டிஷ் ஒவ்வாமை அறக்கட்டளை சான்று பெற்றது. இதனால் ஆஸ்துமா, ஒவ்வாமை உட்பட சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாது.
இதில் உள்ள வடிகட்டிகளை வெளியில் எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்யலாம். இதற்கு ஓராண்டு உத்தரவாதம் அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story