வானவில் : பெண்களை பாதுகாக்கும் பெப்பர் ஸ்பிரே துப்பாக்கி


வானவில் : பெண்களை பாதுகாக்கும் பெப்பர் ஸ்பிரே துப்பாக்கி
x
தினத்தந்தி 27 March 2019 4:48 PM IST (Updated: 27 March 2019 5:49 PM IST)
t-max-icont-min-icon

நாளுக்குநாள் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வருவதைப் பார்த்து பெற்றோர்கள் வீட்டை விட்டு பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பவே அஞ்சுகின்றனர்.

கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் கற்றுக் கொண்டாலும், சில நேரங்களில் அவை பயனளிப்பதில்லை.

சால்ட் பெப்பர் எனப்படும் இந்த ஸ்ப்ரேகன் பெண்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தூள் செய்யப்பட்ட மிளகு மற்றும் கண்ணீர் புகை தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருக்கும். யாராவது தாக்க வரும் போது அவர்கள் மீது ஸ்பிரே செய்தால் கண்களில் எரிச்சல் ஏற்படுத்தி தெளிவாக பார்க்க முடியாமல் செய்து விடும். இது மட்டுமின்றி சுவாசிப்பதும் சிறிது சிரமமாக இருக்கும். ஆனால் இதனால் உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்படாது. தீங்கு விளைவிக்க நினைக்கும் நபரை தடுமாறச் செய்து அந்த இடத்தில் இருந்து தப்பிவிடலாம்.

இதை உபயோகிப்பது பாதுகாப்பானது என்று அமெரிக்க ராணுவம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் தோட்டாவில் இருக்கும் திரவம் ஐந்து வருடங்களுக்கு கெட்டுப் போகாது. அதே போல் இந்த துப்பாக்கியை உபயோகிக்கும் பொழுது எந்த சத்தமும் கேட்காது. திரவத் தோட்டாக்கள் தீர்ந்த பின் மீண்டும் நிரப்பி உபயோகிக்கலாம். இதன் விலை சற்று அதிகம்தான் என்றாலும் பாதுகாப்புக்காக இந்த விலை கொடுப்பதில் தவறில்லை. இதன் விலை சுமார் ரூ.23,800.

Next Story