வானவில் : பானாசோனிக்கின் ‘டோட்டல் சொல்யூஷன்’
ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகும்.
கோடை வெயிலை குளுமையாக்க புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட ஏ.சி.க்களை அறிமுகம் செய்துள்ளது. வெயிலின் கடுமைக்கு ஒட்டுமொத்த தீர்வளிக்கும் விதமாக இவற்றுக்கு ‘டோட்டல் சொல்யூஷன்’ என பெயர் சூட்டியுள்ளது பானாசோனிக். இதில் நான்கு வழிகளில் குளிர் காற்றை வெளிப்படுத்தும் தன்மை உள்ளது. இதனால் விரைவாக அறை குளிர்ச்சியடையும். இயற்கை தன்மையோடு குளிர் காற்றை அளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் சிக்கனமானது. நீடித்து உழைப்பது, அழகிய வடிவமைப்பைக் கொண்டிருப்பதும் இவற்றின் சிறப்பம்சமாகும். இவற்றின் விலை ரூ.39,900 முதல் ரூ.53,990 வரையாகும். 1 டன், 1.2 டன், 1.5 டன் மற்றும் 2 டன் அளவுகளில் இது வந்துள்ளது. இதில் ஜப்பானிய தொழில்நுட்பமான இரட்டை கூல் இன்வெர்டர், ஏரோவிங்ஸ், 4 வழி காற்று வீசும் வசதி உள்ளன.
இதில் நானோ டெக்னாலஜி, ஏ.ஜி. கிளன் பில்டர் உள்ளதால் சுத்தமான காற்று வீசும். இதில் பூஞ்ஜை அடைவது, அழுக்கு படிவதும் குறையும். இதனால் சுத்தமான காற்று வீசுவது ஆரோக்கியத்துக்கும் நல்லதாக இருக்கும். கம்ப்ரஸருக்கு 10 ஆண்டு, வெளிப்புற கேஸிங்கிற்கு 5 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படும். இதில் உள்ள புளூ பின் கன்டென்ஸர் துருப்பிடிக்காத தன்மை கொண்டது. கோடைக் காலத்தில் குளுகுளு ஏ.சி. காற்று வாங்கி வெயிலின் கொடுமையை சமாளிக்கலாமே.
Related Tags :
Next Story