வானவில் : ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5.80 லட்சம்
நமக்குத் தெரிந்ததெல்லாம் ஆப்பிள் ஐபோன். இதன் விலை லட்சத்தைத் தாண்டிவிட்டது. இருந்தாலும் இது வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது.
ரஷியாவைச் சேர்ந்த கேவியர் நிறுவனம் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.5.80 லட்சமாகும். இதில் பிரீமியம் மாடலின் விலை ரூ.6.29 லட்சமாகும். ஸ்மார்ட்போனில் கீ கொடுத்தால் இயங்கும் கைக் கடிகாரம் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சமாகும். இந்த விலை உயர்ந்த மாடலில் மொத்தமே 99 ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஸ்மார்ட்போனுடன் பாரம்பரியமான கடிகார தொழில்நுட்பத்தை இணைக்க முடிவு செய்து அதனடிப்படையில் இந்த போன் தயாரிக்கப்பட்டதாக இந்நிறுவனம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. கருப்பு டைட்டானியம் பேனலைக் கொண்டதாகவும், சில பகுதிகள் தங்க நிற ஜொலிப்பை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மாடல்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.5.80 லட்சமாகும். இது ஐபோன் எக்ஸ்.எஸ். எனப்படுகிறது. 256 ஜி.பி. மாடல் விலை ரூ.6.01 லட்சமாகும். இதில் 512 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை ரூ.6.29 லட்சமாகும்.
இவை எக்ஸ்.எஸ். மேக்ஸ். என்றழைக்கப்படுகிறது. இதன் முன்பகுதி வழக்கமான ஆப்பிள் ஐ போனைப் போன்று உள்ளது. பின்பகுதியில் இரண்டு கேமராக்கள் உள்ளன. அத்துடன் 24 கேரட் தங்கத்தினால் ஆன கடிகாரம் உள்ளது. இந்த கடிகாரம் கீ கொடுத்தால் வேலை செய்யும் அந்தக் கால கைக்கடிகாரம் போன்றது. இதில் கீ கொடுத்தால் 30 மணி நேரம் செயல்படும். அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ள விரும்பும் கோடீஸ்வரர்களுக்கேற்ற ஸ்மார்ட்போன் இது.
Related Tags :
Next Story