வானவில் : ‘ஹானர் 10 லைட்’ அறிமுகம்
ஹானர் நிறுவனம் தனது புதிய மாடல் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஹானர் நிறுவனம் தனது புதிய மாடல் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.11,999 ஆகும். இதில் செயற்கை நுண்ணறிவு மிக்க செல்பி கேமரா 24 மெகா பிக்ஸெலில் உள்ளது சிறப்பம்சமாகும். அத்துடன் இதில் காட்சிகளை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளதால் இதில் படங்கள் மிகத் தெளிவாக பதிவாகும்.
செல்பி புகைப்படம் எடுப்போரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் முன்பக்கத்திலேயே 24 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. லைட் பியூஷன் தொழில்நுட்பம் இருப்பதால் பல்வேறு வகையான ஒளி அமைப்புகளில் படங்கள் எடுத்துக் கொள்ள முடியும். முன்பக்க கேமராவில் 8 வகையான செல்பி சீனரிகளை அது கொண்டு வரும். இதன் மூலம் மிகச் சிறப்பான செல்பி படங்களை எடுக்க முடியும். பகல், இரவு வேளைகளில் படம் எடுக்க இது மிகவும் உதவும். இதில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் உள்ளது. இது சபையர் நீலம், மிட்நைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது.
Related Tags :
Next Story