வானவில் : சாம்சங்கின் குறைந்த விலை கேலக்ஸி ஏ10
கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை பிரீமியம் ரக ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகப்படுத்தி வந்தது.
தற்போது அனைத்து பிரிவினரும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலை ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீன தயாரிப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கேலக்ஸி ஏ10 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,490. இளம் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இது 6.2 அங்குல தொடு திரையைக் கொண்டது.
இதில் 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்பகுதியில் 5 மெகா பிக்ஸெல் கேமரா செல்பி பிரியர்களுக்கு ஏற்றது. இது முக அடையாளம் கொண்டு ஸ்மார்ட்போன் செயல்படவும் உதவும்.
இதில் 3,400 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. வாரத்துக்கு 158 நிமிடம் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிரவும், 206 நிமிடம் விளையாடவும் தேவையான வசதிகள் இதன் உள்ளட்டில் உள்ளன. இது 2 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 512 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். சிவப்பு, நீலம், கருப்பு உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் இது வந்துள்ளது.
Related Tags :
Next Story