வானவில் : பாதுகாப்பு அம்சங்களுடன் ‘டட்சன் ரெடி கோ’
சிறிய ரகக் கார்களில் டட்சன் ரெடி கோ மாடல் பரவலாக பெரிதும் விரும்பப்படும் காராகும்.
ஹேட்ச்பேக் மாடலான இந்தக் காரில் தற்போது ஏ.பி.எஸ். வசதி (ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம்) புகுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் உற்பத்தியாகும் அனைத்து கார்களிலும் ஏ.பி.எஸ். இருக்க வேண்டியது கட்டாயம் என தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் டட்சனும் தனது ஆரம்ப நிலை காரான ரெடி கோவில் இந்த வசதியை உருவாக்கியுள்ளது. இது தவிர அனைத்து சீட்களுக்கும் சீட் பெல்ட் உருவாக்கிஉள்ளது.
அத்துடன் பின்பக்க கதவில் குழந்தைகள் திறக்காமல் இருப்பதற்காக பூட்டும் வசதி, பின்பக்க நிறுத்த விளக்கு உள்ளிட்டவை கூடுதல் வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக டிரைவர் இருக்கைக்கு ஏர்பேக் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ரிமோட் லாக், எல்.இ.டி. விளக்கு உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் சேர்க்கப்பட்ட போதிலும் இவற்றின் விலை முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.4 ஆயிரம் அதிகமாகும். இது 54 ஹெச்.பி. திறன் கொண்டது. 799 சி.சி. 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. இதில் மற்றொரு மாடலில் 68 ஹெச்.பி. திறனும், 1 லிட்டர் என்ஜினும் கொண்டது.
இதில் ஏ.எம்.டி. எனப்படும் ஆட்டோமேடிக் மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. சிறிய ரகக் காரான ரெடி கோ, சந்தையில் ரெனால்ட் க்விட், மாருதி சுஸுகி ஆல்டோ, ஆல்டோ கே10 ஆகிய மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story