உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் தகனம் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி
திருச்சியில் உடல்நலக் குறைவால் மரண மடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் தகனம் நேற்று நடந்தது. அவரது உடலுக்கு அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி,
தி.மு.க. முன்னாள் அமைச்சர் என். செல்வராஜ் (வயது 75) நேற்று முன்தினம் மாலை உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் தில்லைநகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
அவரது உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று காலை மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
எம்.பி.க்கள் ப.குமார், வைத்திலிங்கம், திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் செல்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மாலையில் செல்வராஜ் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது இளைய மகன் கருணை ராஜா தீ மூட்டினார்.
Related Tags :
Next Story