சேவை வாக்காளர்கள், குடும்பத்தினர் மூலம் ஓட்டுப்போட முடியும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
சேவை வாக்காளர்கள் குடும்பத்தினர் மூலம் ஓட்டுப்போட முடியும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறினார்.
பெங்களூரு,
சேவை வாக்காளர்கள் குடும்பத்தினர் மூலம் ஓட்டுப்போட முடியும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறினார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வாக்களிக்கும் வாய்ப்பு
தேர்தல் பணியில் ஈடுபடும் துணை ராணுவம், மத்திய ஆயுதப்படை, மாநில போலீசார் மற்றும் வெளிநாடுகளில் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஓட்டுப்போட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
சட்டத்தில் இடம் இருந்தாலும், அதை சரியாக அமல் படுத்தாததால், அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் இன்று (அதாவது நேற்று) நடைபெற்றது.
ஓட்டுப்போட முடியும்
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களை சேைவ வாக்காளர்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். சேவை வாக்காளர்கள், தங்கள் குடும்பத்தினர் மூலம் ஓட்டுப்போட முடியும். அதாவது அவர்கள், இதுபற்றி தங்கள் சார்பில் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கலாம்.
அந்த சேவை வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை நிரூபிக்கும் வகையில் நோட்டரி மூலம் கடிதம் பெற்று வாக்குச்சாவடியில் காட்ட வேண்டும். சேைவ வாக்காளர்கள், ஓட்டுப்போடுவது மிக குறைவாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 40 ஆயிரத்து 729 பேர் பெயர்களை பதிவு செய்தனர். ஆனால் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
மிக முக்கியமானது
ஜனநாயகத்தில் வாக்களிப்பது என்பது மிக முக்கியமானது. தற்போது நடைபெறும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 ஆயிரத்து 539 சேவை வாக்காளர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.
Related Tags :
Next Story