கவர்னர் மாளிகையில் காந்தி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
கவர்னர் மாளிகையில் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
சென்னை,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ‘மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். கவர்னரின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஆர்.ராஜகோபால் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துரையாடினார். அப்போது, ‘காந்தி தன்னுடைய இதயத்தில் தமிழகத்திற்கு எப்போதும் தனி இடம் அளித்திருந்தார். ஆமதாபாத்தில் காந்தி சபர்மதி ஆசிரமம் தொடங்கியபோது அதில் இருந்த 25 பேரில் 13 பேர் தமிழர்கள். 1896 முதல் 1946 வரையான காலகட்டத்தில் காந்தி 20 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்’ என்று தெரிவித்தார்.
கண்காட்சியை பார்வையிட வந்த மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்வாக, வருகை தந்த பார்வையாளர்கள், மாணவர்கள் அனைவரையும் கவர்னர் மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

Related Tags :
Next Story