குளித்தலை, தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா
குளித்தலை, தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
குளித்தலை,
குளித்தலையில் உள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூபதிராஜ் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் சார்பில் கணினி, டேபிள், சேர், பீரோ, தலைவர்கள் படங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கப்பட்டது. முன்னதாக பொதுமக்களை, பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சந்திரா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கிளை மேலாளர் சுரேஷ்கென்னடி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஆசிரியை இந்திராணி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் நாகரெத்தினம் நன்றி கூறினார்.
தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஊர் நாட்டாண்மை பெரியசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி இடைநிலை ஆசிரியர் ராஜராஜன் வரவேற்றார். இதில் பொதுமக்கள் பள்ளிக்குத் தேவையான சேர், மின்விசிறி , பீரோ, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை கல்விச்சீராக ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர். பின்னர் இதனை அடுத்து பள்ளி மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர் முத்துகுமாரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரிகண்ணன், பெற்றோர் சங்க தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story