பா.ஜ.வுக்கு போடும் ஓட்டு கடலில் விழும் மழைத்துளிக்கு சமம் நாஞ்சில் சம்பத் பேச்சு
பா.ஜ.வுக்கு போடும் ஓட்டு கடலில் விழும் மழைத்துளிக்கு சமம் என்று புதுச்சேரி பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
பாகூர்,
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவளக்குப்பம், அரியாங் குப்பத்தில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் செய்தார். தவளக்குப்பத்தில் அவர் பேசியதாவது:-
இந்தியாவின் காவலாளி என பிரதமர் மோடி தன்னை கூறி வருகிறார். வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்த நீரவ் மோடி தப்பி சென்றபோது கண்டு கொள்ளாமல் இருந்த அவரா நாட்டின் காவலாளி?, ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என ஏற்கனவே உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தது தெரிந்தும், ஒரே நேரத்தில் அத்தனை ராணுவ வீரர்களையும் தரை வழி பயணத்திற்கு அனுமதித்த பிரதமரா நாட்டின் பாதுகாவலர். ரபேல் விமான ஊழல் குறித்து அவரால் பதில் கூற முடியுமா?
ரூ.122 கோடியாக இருந்த பாபா ராம்தேவ் வருமானம், மோடி பிரதமர் ஆனதும் ரூ.322 கோடியாக உயர்ந்தது. அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் வருமானமும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் கோடியானது. இதுதான் மோடி அரசு. அவர் ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. இந்தியாவின் பன்முக தன்மையை அவர் பாழ்படுத்தி விட்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் கவர்னராக உள்ள கிரண்பெடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., என தன்னாட்சி அமைப்புகளை பிரதமர் மோடி சிதைத்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அரசியல் பாரம்பரியம் கொண்டவர். அவருக்கு போடும் ஓட்டு பெற்ற தாய்க்கு சேவை செய்வதற்கு சமம். பா.ஜ.வுக்கு போடும் ஓட்டு கடலில் விழும் மழைத்துளி போன்று பயனற்றது. வைத்திலிங்கம் வெற்றி பெற்றால், நிச்சயமாக மத்திய மந்திரி ஆவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story