தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 28 March 2019 3:00 AM IST (Updated: 28 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்காக 4 ஆயிரத்து 184 வாக்குச்சீட்டு பொருத்தும் எந்திரம், 2 ஆயிரத்து 652 வாக்குப்பதிவு எந்திரம், 2 ஆயிரத்து 957 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் எந்திரம் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந் தன.

இந்த எந்திரங்கள் அனைத்தும் சுழற்சி(ரேண்டம்) முறையில் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்த எந்திரங்கள் அனைத்தும் நேற்று அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. இதற்காக உதவி தேர்தல் அலுவலர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து சென்று தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.

Next Story