தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.ம.மு.க.வினர் 100 பேர் மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.ம.மு.க.வினர் 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க பறக்கும் படையினர், கண்காணிப்பு குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் அசோக் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் கில்பர்ட் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் கிருஷ்ணகிரி ரவுண்டான அருகில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போகனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், அ.ம.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊர்வலமாக சென்றதாக கூறியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் அ.ம.மு.க.வினர் 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story