பர்கூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
பர்கூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகி வரும் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பெலவர்த்தி வள்ளுவர்புரத்தில் 900-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்பகுதியில் தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. ஒகேனக்கல் குடிநீரும் வினியோகம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தண்ணீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல் லை. எனவே, இந்த முறை தேர்தலில் ஓட்டு கேட்டு யார் வந்தாலும் கிராமத்திற்குள் விடமாட்டோம். மேலும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story