பெஸ்ட் மின் கட்டணம் 3 சதவீதம் குறைப்பு மற்ற நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துகிறது
மராட்டியத்தில்,பெஸ்ட் மின் கட்டணம் 3 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்துகிறது.
மும்பை,
மராட்டியத்தில்,பெஸ்ட் மின் கட்டணம் 3 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்துகிறது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்
மராட்டியத்தில் உள்ள 2½ கோடி வீடுகள், குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகாவாட் வரை தினமும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் இந்த அளவு 24 ஆயிரம் மெகாவாட் மின்சாரமாக உயரும். எனவே மாநில மின் நிறுவனங்கள் வழக்கத்தை விட அதிகமாக மின் கொள்முதல் செய்ய வேண்டும்.
இந்தநிலையில் மராட்டிய மாநில மின் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் மின் நிறுவனங்களுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து உள்ளது. இந்த கட்டண மாற்றம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
3 சதவீதம் குறையும்
இந்த புதிய கட்டணத்தின்படி மும்பையில் உள்ள பெஸ்ட் நிறுவன மின் கட்டணம் 3 சதவீதம் வரை குறையும். இதனால் மும்பையில் உள்ள 10½ லட்சம் பெஸ்ட் நிறுவன வாடிக்கையாளர்கள் பலன் பெறுவார்கள்.
ஆனால் மாநில மின் பகிர்வு நிறுவனத்தின் (எம்.எஸ்.இ.டி.சி.எல். கட்டணம் 6 சதவீதமும், டாடா நிறுவன கட்டணம் 2 சதவீதமும், அதானி நிறுவன கட்டணம் 1 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வாஷியை சேர்ந்த ஸ்ரீதர் கூறுகையில், ‘மும்பையில் கட்டணம் குறைக்கப்பட்டு புறநகரில் வசிக்கும் மாநில மின் பகிர்வு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றார்.
Related Tags :
Next Story