ரெயில் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு ரூ.4 கோடி இழப்பீடு லோக் அதாலத் உத்தரவு
ரெயில் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்க லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
ரெயில் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்க லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.
218 வழக்கு முடித்து வைப்பு
மும்பை ரெயில்வே இழப்பீடு தீர்ப்பாயத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தினமும் மும்பை ரெயில்வே தீர்ப்பாயத்தில் சுமார் 12 வழக்குகள் பதிவாகின்றன. எனவே இந்த வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க லோக் அதாலத் அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு நேற்று முன்தினம் ஒரே நாளில் 218 வழக்குகளை முடித்து வைத்து உள்ளது. இதில் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
புனேயை சேர்ந்தவர்
புனேயை சேர்ந்த சுந்தர் ராஜ் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு கூட்ட நெரிசல் காரணமாக குர்லா அருகே சென்று கொண்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரின் வலது கால் துண்டானது. அவருக்கு லோக் அதாலத் ரூ.3.2 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு இழப்பீடு கிடைத்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Related Tags :
Next Story