செய்யாறு பகுதியில் வீதி வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குசேகரிப்பு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு


செய்யாறு பகுதியில் வீதி வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குசேகரிப்பு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 March 2019 4:00 AM IST (Updated: 28 March 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் செஞ்சி ஏழுமலை, செய்யாறு பகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் வீதி வீதியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

செய்யாறு, 

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் அவர் நேற்று செய்யாறில் பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள ஆதிபராசக்தி கோவில் முன்பாக நடந்த நிகழ்ச்சியில் பிரசாரத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ஆற்காடு சாலை, ஆரணி கூட்ரோடு, காந்தி சாலை மற்றும் திருவோத்தூர் பகுதியில் வீதி, வீதியாக சென்று செஞ்சி சேவல் வி.ஏழுமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆதரவுடன் ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராக செஞ்சி சேவல் வி.ஏழுமலை அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்றதை தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாரபட்சமின்றி திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் 2½ லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வருகிற 18-ந் தேதி நடக்கும் தேர்தலில் அவருக்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். செஞ்சி ஏழுமலையை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உழைத்திட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் எம்.மகேந்திரன், வக்கீல் முனுசாமி, எஸ்.கார்த்திகேயன், டி.பி.துரை, கே.ஆர்.தாமோதரன், வக்கீல் சரவணன், ஜவகர், கண்ணன், பெருமாள், கிருஷ்ணன், ஜெய்சங்கர், சீனுவாசன், இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story