ஜன்னல் கடை
ப்ரூக்ளினில் உள்ள கிங்ஸ்டன் அவென்யுவில் இருக்கிறது இந்த வித்தியாசமான ஜன்னல் உணவு விடுதி.
சுவரில் கதவு கிடையாது. ஜன்னல் போன்று பகுதி மட்டுமே இருக்கிறது. இது வழியாக சுவை மிகுந்த கரீபியன் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜமைக்காவிலிருந்து வந்த பப்பா என்பவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவு விடுதியை ஆரம்பித்தார்.
இந்த விடுதியின் பெயரே ‘ஹோல் இன் தி வால்’! தினமும் குறிப்பிட்ட நேரம் மட்டும் சுவரில் உள்ள இந்த ஜன்னல் திறக்கப்படும். உணவு தீர்ந்து போகும் வரை விற்பனை நடக்கும். பிறகு ஜன்னலும் மூடப்பட்டுவிடும். ஒவ்வோர் உணவும் 2 விதமான அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகாக பார்சல் செய்யப்பட்ட உணவுகளை வாங்கிக்கொண்டு, வீட்டில் வைத்துச் சாப்பிட வேண்டும். அங்கே உட்கார்ந்து சாப்பிடும் வசதி இல்லை.
“இந்த விடுதியைத் தெரிந்தவர்கள் மட்டுமே உணவு வாங்கிச் செல்வார்கள்.
உணவின் சுவை அலாதி. அதனால் தினமும் விடுதி திறந்திருக்கும் நேரத்தில் கூட்டம் அதிகமிருக்கும்’’ என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
Related Tags :
Next Story