ஓசூரில் தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் பொது பார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன் எச்சரிக்கை
ஓசூரில் தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பொது பார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன் பேசினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்தல் நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு, உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான விமல்ராஜ் தலைமை தாங்கினார். இதில், ஓசூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் கட்சிகளும், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அன்றாட செலவுகளை குறிப்பிட்ட படிவம் வாயிலாக முழுமையாக பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், கூட்டம் நடத்தும்போதும், ஊர்வலங்கள், தெருமுனை பிரசாரம் போன்றவற்றை மேற்கொள்ளும்போது உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது. தேர்தலை மிகவும் நேர்மையாக நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டது. கூட்டத்தில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் அலுவலர்கள், வேட்பாளர்கள், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story