கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு
உத்தனப்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கெம்பன்(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது இரண்டாவது மனைவி ராதா(26). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் ராதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த கள்ளக்காதலுக்கு ராதாவின் 1½ வயது பெண் குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராதா, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி தனது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் 1½ வயது குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ராதாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து ராதாவை போலீசார் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
Related Tags :
Next Story