விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை முறையாக பணி வழங்க கோரிக்கை

விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை முறையாக பணி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 March 2019 3:30 AM IST (Updated: 29 March 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

முறையாக பணி வழங்க வலியுறுத்தி, விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

விளாத்திகுளம்,

முறையாக பணி வழங்க வலியுறுத்தி, விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

யூனியன் அலுவலகம் முற்றுகை

விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளர்களுக்கு முறையாக பணி வழங்கப்படவில்லை. அங்கு பணியாற்றும் தேசிய ஊரக தொழிலாளர்களில் சிலருக்கு மட்டுமே சுழற்சி முறையில் பணி வழங்குவதாக கூறப்படுகிறது.

எனவே அனைத்து தேசிய ஊரக தொழிலாளர்களுக்கும் முறையாக பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த தேசிய ஊரக தொழிலாளர்கள் நேற்று விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் யூனியன் ஆணையாளர் அரவிந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து தேசிய ஊரக தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story