தூத்துக்குடியில் அனுமதியின்றி நடப்பட்ட 134 கொடிக்கம்பங்கள் அகற்றம்


தூத்துக்குடியில் அனுமதியின்றி நடப்பட்ட 134 கொடிக்கம்பங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 29 March 2019 3:00 AM IST (Updated: 29 March 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அனுமதியின்றி நடப்பட்ட 134 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அனுமதியின்றி நடப்பட்ட 134 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

கொடிக்கம்பம்

மாநகர பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. இதில் அனுமதி பெறாமல் நடப்பட்டு உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் உத்தரவின் பேரில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

அகற்றம்

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் 32 கொடிக்கம்பங்களும், மேற்கு மண்டலத்தில் 36 கொடிக்கம்பங்களும், வடக்கு மண்டலத்தில் 33 கொடிக்கம்பங்களும், தெற்கு மண்டலத்தில் 33 கொடிக்கம்பங்களும் ஆக மொத்தம் 134 கொடிக்கம்பங்கள்அகற்றப்பட்டன.

ஆங்காங்கே கொடிக்கம்பங்களை அகற்றும்போது அரசியல் கட்சியினர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் அதிகாரிகள் கொடிக்கம்பங்களை அகற்றி எடுத்து சென்றனர். இந்த பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

Next Story