ஆலங்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர பிரசாரம்


ஆலங்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆலங்குளம், 

ஆலங்குளம் பகுதியில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வேட்பாளர் ஞானதிரவியம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் ஒன்றியத்திலுள்ள வெண்ணிலிங்கபுரத்தில் நேற்று முன்தினம் மாலையில் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதையும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெண்ணிலிங்கபுரம், காவலாகுறிச்சி, ரெட்டியார்பட்டி, கடங்கநேரி,நெட்டூர், மருதபுரம்,சுப்பையாபுரம், அய்யனார்குளம், சிவலார்குளம்,கரும்புளியூத்து, மாறாந்தை ஆகிய இடங்களில் ஞானதிரவியம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சொந்த செலவில் கெபி

அப்போது அவர் பேசுகையில்,‘ பீடி தொழிலாளர்கள், விவசாயிகள் தேவைகளை அறிந்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவும்,அவர்களின் நலன் காக்கவும் பாடுபடுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையம் நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த பகுதி ஆலயத்திற்கு எனது சொந்த பணத்தில் கெபி அமைத்து கொடுப்பேன்’ என்றார். இந்த பிரசாரத்தின் போது, மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், ஊத்துமலை ஊராட்சி செயலாளர் கோட்டைச்சாமி, மாவட்ட வக்கீல்கள் அணி துணை அமைப்பாளர் தவசிராஜன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை உட்பட கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலையில் 2-வது நாளாக வேட்பாளர் ஞானதிரவியம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட நல்லூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து குருவன்கோட்டை, கீழபட்டமுடையார்புரம், குறிப்பான்குளம், கிடாரகுளம், நாரணாபுரம், மாயமான்குறிச்சி, தெற்கு மாயமான் குறிச்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இரவு ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் நேற்றைய பிரசாரத்தை அவர் நிறைவு செய்தார்.

Next Story