மாவட்ட செய்திகள்

பரமத்தி வேலூரில்தேங்காய் பருப்பு விலை உயர்வு + "||" + Perumal in Vellore Coconut pulses

பரமத்தி வேலூரில்தேங்காய் பருப்பு விலை உயர்வு

பரமத்தி வேலூரில்தேங்காய் பருப்பு விலை உயர்வு
பரமத்திவேலூரில் தேங்காய் பருப்பு விலை உயர்ந்து உள்ளது.
பரமத்திவேலூர், 

பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக் கிழமைதோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஏலத்திற்கு கொண்டு வருகின் றனர். இங்கு தரத்திற்கு ஏற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 765 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.90.09-க்கும், குறைந்த பட்சமாக ரூ.80.75-க்கும், சராசரியாக ரூ.83.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.58 ஆயிரத்து 608-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 740 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்ச மாக ஒரு கிலோ ரூ.95.09-க்கும், குறைந்த பட்சமாக ரூ.88.69-க்கும், சராசரியாக ரூ.90.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.61 ஆயிரத்து 875-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் பருப்பின் வரத்து சற்று குறைந்து இருந்தாலும், அதன் விலை உயர்வடைந்து இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை