ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை
x
தினத்தந்தி 29 March 2019 3:00 AM IST (Updated: 29 March 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரும், ஆசிரியர்களும் இணக்கமாக இருப்பதற்காக பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் கல்விசீர் வழங்கப்பட்டு வருகிறது.

வத்திராயிருப்பு,

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரும், ஆசிரியர்களும் இணக்கமாக இருப்பதற்காக பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் கல்விசீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கான்சாபுரம் கிராம மக்கள் சார்பில் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு தேவையான பாத்திரங்கள், சேர், பீரோ, குடம், வாளி, சாக்பீஸ், பரீட்சை அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கிராம மக்கள் சார்பில் மேள தாளங்கள் முழங்க வீதிகள் வழியாக கல்வி சீர்வரிசையை பேரணியாக எடுத்து சென்றனர். அப்போது பள்ளியின் நுழைவு வாயிலில் நின்றிந்திருந்த ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த கல்வி சீரை பெற்றோர்கள் பள்ளிக்கு வழங்கினர். இந்தநிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் லட்சுமணன் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பார்வையாளர் பெத்தன்னசாமி பேசினார்.

Next Story