தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் தலைமையில் நடந்தது


தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாத்குமார் தலைமையில் நடந்தது.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் ஏப்ரல் மாதம் 18–ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாத்குமார், தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.


கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை, தேர்தல் செலவுகளை கண்காணிப்பது, தேர்தல் பணிகளை திட்டமிடல், தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் முறை, பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடல், தேர்தல் தொடர்பான பொருட்கள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை, தேர்தல் தொர்பான பயிற்சி மேலாண்மை, தேர்தல் தொடர்பான சிவிஜில் செயலியின் புகார்களை கண்காணித்தல், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு 20 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, விளக்கி கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், துணை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிரகாஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீனாட்சி(அரவக்குறிச்சி), மல்லிகா(கிருஷ்ணராயபுரம்), சிவதாஸ்(விராலிமலை), நடராஜன்(மணப்பாறை), ஜான்சன்(வேடச்சந்தூர்) உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story