செல்லிபாளையம் காலனி பகுதியில் கூலி தொழிலாளர்களிடம் தம்பிதுரை வாக்கு சேகரிப்பு
செல்லிபாளையம் காலனி பகுதியில் கூலி தொழிலாளர்களிடம் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரித்தார்.
கரூர்,
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள செல்லிபாளையம் காலனி பகுதியில் கூலி தொழிலாளர்களிடம், அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசின் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை, நான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறி 150 நாட்களாக உயர்த்தினேன். தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து இன்று முதல்–அமைச்சராக உள்ளார். அவர் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை நன்கு தெரிந்து அதன்படி திட்டங்கள் அறிவித்து நிறைவேற்றி வருகிறார். ஆனால் தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்தபோதே எதுவும் செய்யாமல் அரசு ஏழை மக்களுக்கு கொடுக்கும் நல்ல திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த காரணத்தால் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க முடியவில்லை. தேர்தல் முடிந்ததும், அந்த பணம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை பகுதியில் தற்போது முழுவீச்சில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரட்டை இலை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தந்த வெற்றி சின்னம். அதற்கு வாக்களித்து லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்கு சேகரிப்பின்போது எம்.கீதா எம்.எல்.ஏ., முன்னாள் கரூர் ஒன்றிய குழு தலைவர் எஸ்.திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கே.கமலக்கண்ணன், டி.என்.பி.எல். கரூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் தங்கவேல், புதிய தமிழகம் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தம்பிதுரை வாக்கு சேகரிக்க சென்றபோது அவரை பொதுமக்கள் உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்.

Related Tags :
Next Story